நிலவுப் பெண்ணாள்!!!!

மையிட்டாள் மஞ்சள்
மெய்யிட்டாள்.
வையத்தின் நிலைகண்டாள்
வெண்மதியாள்.

கைதொடாத்தூரத்தின்
காட்சியாள்.
தையலார்தம் மன ஏக்கம்
தேற்றுவாள்.

மையலில் மயங்கும்
நிலைதருவாள்.
மாறாது எம் நெஞ்சில்
வாழ்ந்திருப்பாள்.

பொய்யாய் ஒருநாள்
மறைவாள்.
பௌர்ணமியாய் வந்து
சிரிப்பாள்.

பைத்தியமாய்க் கவிசொல்ல
வைப்பாள்.
வைத்தியமும் அவளாக
உடன்வருவாள்.

ஐயோ!!! இவள் அழகில்
மயங்காது
வையத்தில் யார் உள்ளார்
சொல்லுங்கள்...

தண்டனை!!!

நீ சிதறவிட்ட
சிரிப்புச் சில்லறையை
வாங்கமறுத்த கடைக்காரரை 
சிரச்சேதம் செய்து விட்டேன்.