Love Quotes

Let us always meet each other with smile, for the smile is the beginning of love.

விடியல்

எல்லா இரவுகளையும் 
விடியவைத்துவிடுகிறது 
உன் வருகை............!! 
ஓசையில்லாமல் 
எழுப்பிவிடுகிறாய் மனவிழிகளை...... 
நீ உறங்கிபோனாலும் 
உறங்கிபோக 
முடியாததாய் நீள்கிறது 
உன் ஊர்வலப்பயணம் பகலிலும்.............. !!!!!!!!! 

தேடி வந்த நேரம்

தேடி வந்த நேரம் ஏன் கண்ணில் தந்தாய் ஈரம்
மழையில் அழுது நின்றேன் இன்னும் தீர வில்லை பாரம்
பிறிகையில் அதிலே சில நொடி மௌனம் சிவந்திடும் கண்கள்
மறு கரை ஓரம் .மீண்டும் வந்து சேர வரங்கள் இங்கு கேட்டேன்
மறைந்து நீயும் சென்றால் என் மரணம் தொடர்ந்தும் தொடர்வேன்

Love Quotes

Friends can help each other. A true friend is someone who lets you have total freedom to be yourself - and especially to feel. Or, not feel. Whatever you happen to be feeling at the moment is fine with them. That's what real love amounts to - letting a person be what he really is.

Love Quotes

Being deeply loved by someone gives you strength, while loving someone deeply gives you courage.

Love Quotes

Keep love in your heart. A life without it is like a sunless garden when the flowers are dead.

விருப்பமில்லாமல் ஒரு கவி

தேன் சுவை நீ 
சுவைத்தேன் நான் 

வீணானவன் நான் 
வீணாக்கியவள் நீ 

கவலையற்றவன் நான் 
கவலை தந்தவள் நீ 

காலைக் கதிரவன் நான் 
மாலை மதி நீ 

மனதில் விழுந்தவள் நீ 
மதியிழந்தவன் நான் 


வளர்பிறையாய் நீ 
தேய்பிறையாய் நான் 

மதியாய் வந்தவள் நீ 
நிம்மதி தொலைத்தவன் நான் 

உனைக்கானாதிருந்தவரை வளர்ச்சியில் நான் 
வலையில் விழுந்து வீழ்ச்சியில் நாம் ... 

இணைய வலையில் இணைந்தோம் 
இருட்டில் இனிமையாய் நடந்தோம் 

விடியும் முன்பே பிரிந்தோம் 
விட்டில் பூச்சிகலாய் ... 

இருவர் முகம் பாராமல் 
முகமலரில் நுழைந்தோம் 
விடிவே இல்லை 
வேதனையின் வலி பெருந்தொல்லை !!

உனக்காக துடிக்கும் இதயம்

என்னுயிரே... 

என் வயலில் நீ ஓடி 
வருவதை பார்த்து... 

என் வயலெல்லாம் 
மலர் தூவினேன்... 

உன் பாதம் பட்டாள் 
மலர்கள் நோகுமென்று... 

உன் தாவணியில் 
சேகரித்தாய்... 

மலரே மலர்களை 
சேகரிப்பதை... 

முதன் முதலில் 
ரசித்தவன் நானடி... 

மலர்கள் நோகுமென்று 
நினைத்தவள்... 

உன்னை மனதார 
நினைத்த... 

என் இதயம் நோகுமென்று 
தெரியவில்லையா உனக்கு... 

மலர்களின் இதழ்களும் 
என் இதயமும் ஒன்றுதானடி... 

என்னருகில் நீ இருந்தால் 
உனக்காக துடிக்கும்... 

என்னைவிட்டு நீ சென்றால் 
உனக்காக மரிக்கும்... 

என் உயிரானவளே.....

குறுசெய்தி

அவள் என்னை பிரியபோகிறாள் -என்பதை 

குறுசெய்தியின் மூலம் தெரிவித்தல் 

அந்த ஒரு செய்தி என் அன்பை -புரியாமல் 

பிரித்தது ........................ஆனால் 

அவள் மேல் வைத்துள்ள அன்போ 

இந்த நொடிகள் ....................... 

வரையும் கூட மறக்கவில்லை ....................... 

இப்பொழுதோ அவள் என்னை 

பிரிந்து .............................................../

உணர்ந்தேன்

உள்ளத்தின் அர்த்தம் 
உணர்ந்தேன் 
என்னை கண்ட அவள் 
வெடுக்கென திரும்பியதும்....

தவறுதலாய்

எதுவென்று புரியவில்லை 
ஒருவேளை 
நான் புரிந்துகொண்டது தவறோ 
உன் புன்னகையை....

Love Failure Kavithai

ஒரு வேளை 
எனக்கு 
பூவாக 
மலர 
வாய்ப்பு 
கிடைத்தால் 
ரோஜாவாகவே 
மலருவேன்..! 

எருக்கம் 
பூவாக 
அல்ல..! 

என்னவளின் 
தலையிலாவது 
இருப்பேன் 
அல்லவா..!

என் இதயம்

உன்மேல் காதல் 
கொண்ட 
என் இதயம் தான் 
பாவபட்டது..! 
மறக்க நினைக்கும் 
போதெல்லாம் 
அதிகம் நினைக்கிறது..! 
அதிகம் துடிக்கிறது..! 
அதிகம் வலிக்கிறது..!

தொலைத்தவன் நீ

>தொலைத்தது< 
நானல்ல... 
நீதான்... 
என்னையும் 
என் காதலையும்....!!!

வலியால் துடிக்கும் இதயம்

நீ
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!

எப்படி
ஏமாற்றுவது என்றுசொல் ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!

ஒன்றை புரிந்து கொள்

உன் மீது நான் வைத்த 
அதீத அன்பால் உன் 
சுதந்திரத்தில் தலையிட்டு 
விட்டேன் ....!!! 

ஒன்றை புரிந்து கொள் 
நான் உன்மீது கொண்ட 
கோபம் உனக்கு வலிதரவல்ல 
வாழ்க்கை தரவே ,,,!!! 

நீயும்சாதாரண காதலர் 
போல் பிரிந்து விட்டாய் ...!!! 

உன்னை நினைத்தே துடிக்கிறது

உன்னையே நினைத்து 
துடித்த என் இதயம் -நீ 
இல்லை என்றபின்னும் 
உன்னையே நினைத்து 
துடிக்கிறது ....!!! 

அதற்கு எங்கே புரிய 
போகிறது - நீ 
புற அழகுக்கு மயங்கி 
விட்டாய் என்று ...!!! 

அதற்கு உள்ளிருந்து 
உன்னை நினைத்தே 
துடிக்கிறது .....!!! 

காதலுக்காய் உருகுகிறது

என் 
காதல் மெழுகு திரியானது... 
இன்பத்தின் போது நீ 
தந்த நினைவுகள் திரட்சியால் 
திரண்டு இருக்க ...!!! 

துன்பத்தின் போது தந்த 
வலிகள் திரியாய் எரிய 
என் உள்ளமும் உடலும் 
காதலுக்காய் உருகுகிறது ...!!! 

காற்றாக வந்தேனும் 
அணைத்து விடு உயிரே ...!!! 

எனது கவிதைகள் சில

1) 
நீ குமரி 
தான் என்றாலும் 
ச்சீ போடா 
எனும் ஒருகணம் 
குழந்தையாகிவிடுகிறாய் 

2) 
அணுவணுவாக வாழ்கையின் 
ஒவ்வொரு அழகையும் 
ரசிக்கும் நீ 
என்னைமட்டும் ஏன் 
ரசிக்கவும் மறுக்கிறாய் 
இரட்சிக்கவும் மறுக்கிறாய் 

3) 
நீ நீரூற்றி வளர்த்த 
ஒவொரு மரமும் 
எனக்கு 
போதி மரம் தான் 

4) 
இது என்ன மாயம் 
உன் பெயரை சொல்லிச் 
சொல்லி வளர்த்த கள்ளிச் 
செடியில் 
ரோஜா பூத்திருக்கிறதே 

எதிர்கால சந்திப்பு

உனை கண்ட உடன், 
கண் சிமிட்டுவேன்... 
புள்ளி மானாய், 
துள்ளி வருவேன்... 
புதிய பூவாய், 
புன்னகைப்பேன்... 
ஆனந்தமாய், 
அன்பு உரையாடுவேன்... 
அமைதியாய், 
ஒரு நிமிடம் உற்றுப்பார் 
விழியோரம் தெரியும்..?! 
உன்னை பிரிந்து நான், 
வாழ்ந்து கொண்டிருக்கும்... 
வலி.