எனது கவிதைகள் சில

1) 
நீ குமரி 
தான் என்றாலும் 
ச்சீ போடா 
எனும் ஒருகணம் 
குழந்தையாகிவிடுகிறாய் 

2) 
அணுவணுவாக வாழ்கையின் 
ஒவ்வொரு அழகையும் 
ரசிக்கும் நீ 
என்னைமட்டும் ஏன் 
ரசிக்கவும் மறுக்கிறாய் 
இரட்சிக்கவும் மறுக்கிறாய் 

3) 
நீ நீரூற்றி வளர்த்த 
ஒவொரு மரமும் 
எனக்கு 
போதி மரம் தான் 

4) 
இது என்ன மாயம் 
உன் பெயரை சொல்லிச் 
சொல்லி வளர்த்த கள்ளிச் 
செடியில் 
ரோஜா பூத்திருக்கிறதே 

எதிர்கால சந்திப்பு

உனை கண்ட உடன், 
கண் சிமிட்டுவேன்... 
புள்ளி மானாய், 
துள்ளி வருவேன்... 
புதிய பூவாய், 
புன்னகைப்பேன்... 
ஆனந்தமாய், 
அன்பு உரையாடுவேன்... 
அமைதியாய், 
ஒரு நிமிடம் உற்றுப்பார் 
விழியோரம் தெரியும்..?! 
உன்னை பிரிந்து நான், 
வாழ்ந்து கொண்டிருக்கும்... 
வலி.

காத்திருப்பு

உனக்காக காத்திருக்கையில் கடிகாரம் கூட என்னை ஏழனமாய் பார்க்கிறது.!!