எதிர்கால சந்திப்பு

உனை கண்ட உடன், 
கண் சிமிட்டுவேன்... 
புள்ளி மானாய், 
துள்ளி வருவேன்... 
புதிய பூவாய், 
புன்னகைப்பேன்... 
ஆனந்தமாய், 
அன்பு உரையாடுவேன்... 
அமைதியாய், 
ஒரு நிமிடம் உற்றுப்பார் 
விழியோரம் தெரியும்..?! 
உன்னை பிரிந்து நான், 
வாழ்ந்து கொண்டிருக்கும்... 
வலி.

No comments:

Post a Comment