எனது கவிதைகள் சில

1) 
நீ குமரி 
தான் என்றாலும் 
ச்சீ போடா 
எனும் ஒருகணம் 
குழந்தையாகிவிடுகிறாய் 

2) 
அணுவணுவாக வாழ்கையின் 
ஒவ்வொரு அழகையும் 
ரசிக்கும் நீ 
என்னைமட்டும் ஏன் 
ரசிக்கவும் மறுக்கிறாய் 
இரட்சிக்கவும் மறுக்கிறாய் 

3) 
நீ நீரூற்றி வளர்த்த 
ஒவொரு மரமும் 
எனக்கு 
போதி மரம் தான் 

4) 
இது என்ன மாயம் 
உன் பெயரை சொல்லிச் 
சொல்லி வளர்த்த கள்ளிச் 
செடியில் 
ரோஜா பூத்திருக்கிறதே 

No comments:

Post a Comment