அமரர்காவியம்

எனக்கென பிறந்தவள் நீ என்றாய் 
உனக்க இருப்பவன் நான் என்றாய் 

காற்றில்லாமலும் வாழ்வேன் 
காதலன் இன்றி ம்ஹும் என்றாய் 

உயிரில்லாமலும் இருப்பேன் 
உரியவன் இன்றி ம்ஹும் என்றாய் 

மதிப்போடு இருந்தவனை மதுவிற்கு 
அடிமை ஆக்கினாய் 

பகையின்றி வாழ்ந்தவனை புகைக்கு இறையாக்கினாய் 

நீயின்றி நான் ஏது என்பாய்? 
எங்கே நீ....? 

நம் காதலுக்கு எதிரியாய் எமனே வந்தாலும் எதிர்த்திருப்பேன் 
நீ வந்ததால் நொருங்கி விட்டேன்,,, 

உனக்காகவே துடிக்கும் என் இதயத்தை நிறுத்த புறப்பட்டேன்,... 
அதற்குமுன் 
ஈரமின்றி துடிக்கும் உன் இதயத்தை நிறுத்த வந்திருக்கிறேன். 

மன்னித்துவிடு அன்பு காதலி

No comments:

Post a Comment