கண்ணீர் மழையாக நான்

புள்ளிகளாக நான் 

ஆயுள் கைதியாகி விடுகிறேன் 
என் ஆயுள் உள்ளவரை 

அவள் விரலிடும் கம்பிக்கோலங்களில்.. 

வார்த்தைகளாக நான் 

ஊமையாகி விடுகிறேன் 
என் உயிர் உள்ள வரை 

அவள் இதழ் கொண்ட 
மௌனச் சிறைகளில்.. 

மெல்லிசையாய் நான் 

கால்களில் கிடக்கின்றேன் 
என் காலம் முடியும் வரை 

அவள் கால்கொண்ட 
கொழுசு மணிகளில்.. 

காதல் பறவையாக நான் 

மாட்டிக் கிடக்கின்றேன் 
மண்மூடும வரை 

அவள் நினைவு கொண்ட 
கனவு வலைகளில்.. 

கண்ணீர் மழையாக நான் 

அழுது அறுவடை செய்கிறேன் 

நான் கொண்ட 
அவள் நினைவு வயல்களில 
"கவிதைப் பூக்களை"

No comments:

Post a Comment