உயிர் நீதானே
உனதானேன்
உணர்வானேன்.......!
எனது உள்ளத்தை
நான் அறியேன்
நீ அறிவாய்.......!
நீ கேட்கும்
கேள்வியே பதிலாக நான்
இருக்க.......!
பதிலை நீ
சொல்ல தயக்கம்
கொள்ள நான்
காரணமா........!
விதியை நான்
நம்பவில்லை
உன்னை
நம்பியதாலே......!
எப்படி நீ
என்னை
நினைக்கிறாய் - உனது
நினைவெல்லாம்
நான் இருக்கையில்..........!
எதற்கும்
துணிந்தேன்
எதையும் எதிர்த்தேன்
உன்னை
நேசித்ததால்.........!
உனது
நம்பிக்கை என்றும்
வீண் போகாதடி
நமது உறவு
முரியாதடி............!
நீ தானே
சொல்கிறாய் நீ
தானே கேட்கிறாய்...........!
நிச்சயம்
தருகிறேன்
எனது இதயத்தை
அடகுவைக்கிறேன்
உன்னை
மீட்டுச்செல்ல........!
No comments:
Post a Comment