தேன் சுவை நீ
சுவைத்தேன் நான்
வீணானவன் நான்
வீணாக்கியவள் நீ
கவலையற்றவன் நான்
கவலை தந்தவள் நீ
காலைக் கதிரவன் நான்
மாலை மதி நீ
மனதில் விழுந்தவள் நீ
மதியிழந்தவன் நான்
வளர்பிறையாய் நீ
தேய்பிறையாய் நான்
மதியாய் வந்தவள் நீ
நிம்மதி தொலைத்தவன் நான்
உனைக்கானாதிருந்தவரை வளர்ச்சியில் நான்
வலையில் விழுந்து வீழ்ச்சியில் நாம் ...
இணைய வலையில் இணைந்தோம்
இருட்டில் இனிமையாய் நடந்தோம்
விடியும் முன்பே பிரிந்தோம்
விட்டில் பூச்சிகலாய் ...
இருவர் முகம் பாராமல்
முகமலரில் நுழைந்தோம்
விடிவே இல்லை
வேதனையின் வலி பெருந்தொல்லை !!
சுவைத்தேன் நான்
வீணானவன் நான்
வீணாக்கியவள் நீ
கவலையற்றவன் நான்
கவலை தந்தவள் நீ
காலைக் கதிரவன் நான்
மாலை மதி நீ
மனதில் விழுந்தவள் நீ
மதியிழந்தவன் நான்
வளர்பிறையாய் நீ
தேய்பிறையாய் நான்
மதியாய் வந்தவள் நீ
நிம்மதி தொலைத்தவன் நான்
உனைக்கானாதிருந்தவரை வளர்ச்சியில் நான்
வலையில் விழுந்து வீழ்ச்சியில் நாம் ...
இணைய வலையில் இணைந்தோம்
இருட்டில் இனிமையாய் நடந்தோம்
விடியும் முன்பே பிரிந்தோம்
விட்டில் பூச்சிகலாய் ...
இருவர் முகம் பாராமல்
முகமலரில் நுழைந்தோம்
விடிவே இல்லை
வேதனையின் வலி பெருந்தொல்லை !!
No comments:
Post a Comment